அதிமுக எனும் எஃகு கோட்டையில் விரிசல் விடாதா? என காத்திருக்கும் எதிரிகள்-தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள் எஃகு கோட்டையான அதிமுகவில் விரிசல் விடாதா என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று தொண்டர்களுக்கு சசிகலா சிறையிலிருந்து கடிதம் எழுதியுள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Sasikala writes letter to her cadres on the occassion of MGR centenary function

அதில் அவர் கூறியிருப்பதாவது: வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள் எஃகு கோட்டையில் விரிசல் விடாதா என்று எண்ணுகிறார்கள். அவ்வாறு விரிசல் விட்டால் அதில் தடி ஊன்றியாவது நாம் எழுந்து விடமாட்டோமா என்றும் கருதுகிறார்கள்.

இந்தியாவின் 3-ஆவது பெரிய இயக்கமாக உயரத்தில் உள்ள அதிமுக சிறிதளவும் கீழ் இறங்கிவிடக் கூடாது. முன்பைவிட கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்ஜிஆர் நூற்றாண்டில் உறுதியேற்போம்.

ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ அதன் பாதுகாப்பை இனியும் உணரலாம் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
On the eve of MGR's Centenary function, Sasikala writes letter to her cadres. She also mentioned her internal party problem.
Please Wait while comments are loading...