For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரணம்: சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி காலமானார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

SC dismisses petitions seeking CBI inquiry into Jayalalithaa's death

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தமிழ்நாடு தெலுங்கு யுவா சம்மேளனம் மற்றும் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் அப்பல்லோ மருத்துவமனை, தமிழக மற்றும் மத்திய அரசுகள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அம்மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுக்களை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court today dismissed the petitions seeking CBI inquiry into Jayalalithaa's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X