For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் "கெயில்" குழாய்களை பதிக்க விதிக்கப்பட்ட இடைக் காலத்தடை நீட்டிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் விளை நிலம் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத்தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழகத்தின் மேற்கு மாவட்ட விளைநிலம் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க முயற்சித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இடைக்காலத்தடையை 3 வாரத்துக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசின் மனுவுக்கு விளக்கம் தர தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court on Monday directed GAIL India Ltd to maintain status quo on natural gas pipeline project in Tamil Nadu, while strongly pitching for protecting farmers’ interests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X