டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து- தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு- தமிழக அரசுக்கு சூடு!
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்தத ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது; தகுதி இல்லாதவர்களை எப்படி நியமிக்கலாம்? என தமிழக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட
டெல்லி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பென்ட் செய்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தகுதியற்ற நபர்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக எப்படி நியமிக்கலாம்? எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டிஎன்பிஎஸ்சியில் தலைவர் உட்பட 14 பேர் உறுப்பினர்கள். டிஎன்பிஎஸ்சி-யில் காலி இடங்களள நிரப்பும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 11 பேர் புதிய உறுப்பினர்களாக்கப்பட்டனர்.

ஹைகோர்ட்டில் வழக்கு
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, வழக்கறிஞர்கள் ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன். ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, பொறியாளர்கள் பி.கிருஷ்ண குமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி. புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் ஆகியோர் புதியதாக உறுப்பினர்களாக ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கு எதிராக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், சமூகநீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதிரடி உத்தரவு
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கடந்த மாதம் 11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களையும் நியமனம் செய்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக அரசு அப்பீல்
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான பெஞ்ச், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.

சுப்ரீம் கோர்ட் கேள்வி
அத்துடன் தகுதியே இல்லாத 11 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஒரே நாளில் நியமனம் செய்தது எப்படி? எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாகும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications