மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் - 16 கிரிமினல்கள் போட்டி
இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். இவர்களில் 16 வேட்பாளர்கள் கடும் குற்றம் செய்த குற்றவாளிகள் ஆவார்.
60 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் நடைபெற்றது. இன்று 2ஆம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலின் போது ஒப்பிடுகையில் இவர்களின் சொத்து மதிப்பு அதிகளவு உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
தேர்தலில் கடந்த 2017ஆம் ஆண்டு சுயேட்சைகள் உள்பட பல்வேறு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல். ஏ.க்கள் 60 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 2 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2.28 கோடியாக இருந்தது. இது தற்போது 4.22 கோடியாக அதிகரித்துள்ளது. வனத்துறை அமைச்சரின் சொத்து 2017ஆம் ஆண்டு 2 லட்சமாக இருந்தது. இது தற்போது 3.97 கோடியாக அதிகரித்துள்ளன. கடந்த தேர்தலின் போது ஒப்பிடுகையில் இவர்களின் சொத்து மதிப்பு அதிகளவு உயர்ந்துள்ளது.
இன்று நடைபெறும் 2ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 92 வேட்பாளர்களில் 16 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 14 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலை விட இது அதிகமாகும். வேட்பாளர்களில் 56 பேர் 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆவார்கள். 205 வேட்பாளர்கள் டிகிரி படித்தவர்கள். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications