இது காதலுக்கான வெற்றி!. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து!
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை கனிமொழி, அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வரவேற்று இருக்கிறார்கள்.
டெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை கனிமொழி, அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வரவேற்று இருக்கிறார்கள்.
இன்று இந்திய சட்டத்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க நாள். பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.
|
உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்
இதுகுறித்து திமுகவை சேர்ந்த கனிமொழி தனது டிவிட்டில் '' நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்!எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.'' என்றுள்ளார்.
|
முக்கியமான ஒரு அடி
இன்னொரு டிவிட்டில் கனிமொழி ''இந்தியா உலக அளவில் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறது. இதன் பிறகாவது நாம் எல்லோரையும் அரவணைக்கக்கூடிய, சகிப்புத்தன்மை உடைய, சுய சிந்தனை உடைய ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்போமாக.'' என்றுள்ளார்.
|
அமீர் கான் வரவேற்பு
இந்தி நடிகர் அமீர் கான், தனது டிவிட்டில் ''சட்ட பிரிவு 377 ஐ நீக்கும் உச்சநீதிமன்ற முடிவிற்கு நன்றி. அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று நினைக்கும் மக்களுக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். நீதித்துறை அதன் கடமையைச் செய்துள்ளது, இப்போது நாம் நம்முடையதை செய்ய வேண்டும்.'' என்றுள்ளார்.
|
அனுஸ்கா சர்மா
இந்தி நடடிக்கை அனுஸ்கா சர்மா ''காதல் மிகப்பெரிய அடி ஒன்றை எடுத்து வைத்துள்ளது. இது காதலுக்கான உரிமை'' என்றுள்ளார்.
|
சசி தரூர் கருத்து
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், இந்த நாட்டில் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களில் அரசை தலையிட நாம் அனுமதித்து வைத்து இருந்தும். மக்களின் பாலியில் தேர்வை அரசு முடக்கும் வகையில் இருந்தது. ஆனால் இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போது சம உரிமைக்கு வழிவகுத்து உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றுள்ளார்.
|
ஐநா வரவேற்பு
உலகம் முழுக்க இந்த தீர்ப்புக்கு வரவேற்ப்பு அளிக்கப்பட்டுள்ளது . அதேபோல் ஐநா சபையை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications