For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோரபுதீன், நீதிபதி லோயா மர்ம மரணம், அமித்ஷா... யார் விசாரிப்பது என்பதில் நீதிபதிகளிடையே பிரச்சனை

சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரண வழக்கை ஒதுக்கீடு செய்வதில்தான் பிரச்சனை என்கிறார் மூத்த நீதிபதி கோகோய்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

    டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடைய சோரபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பான வழக்கை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதும் தலைமை நீதிபதிக்கு எதிரான போர்க்கொடிக்கான காரணங்களில் ஒன்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். டெல்லி துக்ளக் சாலையில் உள்ள செல்லமேஸ்வர் பங்களாவில் இச்செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    இந்த செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்பாக பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் பதிவு செய்துள்ளதாவது:

     Senior Judges speak out on assignment of Justice Loya's death case

    சார்பாக நீதிபதி செல்லமேஸ்வர் கூறியதாவது:

    இன்று காலை நாங்கள் 4 பேரும் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்தோம். அவரிடம் கோரிக்கையை வைத்திருந்தோம்.

    செய்தியாளர்: நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தது தொடர்பாகவா?

    நீதிபதி செல்லமேஸ்வர்: நீதிபதி கோகோயுடன் ஆலோசிக்கிறோம். தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை உங்களுக்குத் தருகிறோம்.

    நீதிபதி கோகோய்: நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவகாரம் இது

    செய்தியாளர்கள்: நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கா?

    நீதிபதி கோகோய்: ஆமாம்.

    செய்தியாளர்கள்: தலைமை நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் (நீக்குவது) கோருகிறீர்களா?

    நீதிபதி செல்லமேஸ்வர்: நாங்கள் யாருக்கு எதிராகவும் இம்பீச்மென்ட் கோரவில்லை.

    செய்தியாளர்கள்: தலைமை நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறீர்களா?

    நீதிபதி செல்லமேஸ்வர்: எங்கள் வாயில் இருந்து வார்த்தைகளை வாங்காதீர்கள்.

    செய்தியாளர்கள்: அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

    நீதிபதி செல்லமேஸ்வர்: நாளை விடுமுறை. அதற்கு பின் நீதிமன்றத்துக்கு செல்ல இருக்கிறோம். நாங்கள் தரும் செய்தி அறிக்கையை பாருங்கள்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நீதிபதி லோயா மர்ம மரணம் விவகாரம் என்ன?

    குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா.

    2005-ம் ஆண்டு நரேந்திர மோடியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சோரபுதீன் உள்ளிட்டோர் என்கவுண்ட்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

    இவ்வழக்கை விசாரித்தவர்தான் நீதிபதி லோயா. 2014-ம் ஆண்டு நீதிபதி லோயா மாரடைப்பில் காலமானார் என கூறப்பட்டது.

    தற்போது நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரி புகார் தெரிவித்தார். இதேபோல் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கை பிற மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யாமல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்ச்சே விசாரித்து வருகிறது. இதுவும் பிரச்சனைக்கு காரணம் என்பதுதான் நீதிபதி ரஞ்சன் கோகோயின் கருத்து,

    English summary
    Four senior most justices of the Supreme Court held a press conference for the issues surrounding a case on the death of special CBI Judge B.H. Loya.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X