For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி குறித்து கேள்வி... பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்த சாமியார் ஸ்வரூபானந்தா

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடி குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பிய செய்தியாளரை சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி.இவர் மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சாமியார்.

Senior priest slaps journalist on being asked about Narendra Modi

முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று வலியுறுத்திக் கூறப்பட்ட போதும், செய்தியாளர் ஒருவர் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து சாமியாரிடம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. செய்தியாளரின் கேள்வியால் அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத நேரத்தில், செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டாராம். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சாமியார் ஸ்வரூபானந்தா காங்கிரஸ் ஆதரவாளர் எனச் சொல்லப் படுகிறது. இதற்கு முன்னர், ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர் என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior priest of the Dwarka Shradha Peeth Shankaracharya Swami Swaroopanand Saraswati is caught in a controversy after he slapped a media person. The senior priest was caught on camera slapping the journalist angry over a question regarding Bharatiya Janata Party Prime Ministerial nominee Narendra Modi's candidature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X