காஷ்மீரில் பல நூறு அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்த கேபிள் கார்- 7 பேர் பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் ரோப் கார் மீது மரம் விழுந்ததால் கேபிள் அறுந்து பல நூறு அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 7 பேர் பலியாகினர்.

Seven die in Gulmarg cable car accident

காஷ்மீரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமான குல்மார்க்கில் பிரெஞ்சு நிறுவனம் 1998-ம் ஆண்டு முதல் ரோப் கார் சேவையை இயக்கி வருகிறது. இன்றும் வழக்கம்போல ரோப் கார்கள் இயக்கப்பட்டன.

அப்போது காற்று பலமாக வீசியது. இதில் மரம் ஒன்று விழ, ரோப் காரின் கேபிள் கட் ஆனது. இதனால் பல நூறு அடி உயரத்தில் இருந்து ரோப் கார் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியாகினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Seven people died after a tree fell on the ropeway in Jammu and Kashmir's Gulmarg.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற