கிரண் பேடியை விட சாசியா இல்மியை நிறுத்தியிருக்கலாமே.. கட்ஜூ ட்விட்டால் சர்ச்சை
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியைவிட 'அழகான' சாசியா இல்மியை நிறுத்தியிருந்தால் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்று பத்திரிகை கவுன்சில் முன்னாள் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ள கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி நிறுத்தப்பட்டுள்ளார். ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கேஜ்ரிவால் களத்தில் உள்ளார். இம்மாநிலத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
இதனிடையே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ டெல்லி தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
|
அழகான இல்மி
தமது ட்விட்டர் பக்கத்தில், கிரண்பேடியை விட சாசியா இல்மி மிகவும் அழகாக உள்ளார். கிரண்பேடிக்கு பதிலாக சாசியா இல்மி நிறுத்தப்பட்டால் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று பதிவிட்டிருந்தார்.
|
குரேசியா உதாரணம்
மேலும் தமது இக்கருத்துக்கு உதாரணமாக குரோசியா அதிபர் தேர்தலில் கொலிண்டா வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டி அடுத்த பதிவைப் போட்டிருக்கிறார் கட்ஜூ. அதில், குரோசியாவைப் போல அழகான முகங்களைப் பார்த்து மக்கள் வாக்களிக்கின்றனர். வாக்களிக்கக் கூட விரும்பாத என்னைப் போன்றவர்கள் சாசியாவுக்காக வாக்களிக்கவும் செய்யலாம்" என்றும் கூறியிருந்தார். மார்க்கண்டே கட்ஜூவின் இந்த ட்விட்டர் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

யார் இந்த இல்மி?
சாசியா இல்மி, தொலைக்காட்சி தொகுப்பாளர். அவர் அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இணைந்திருந்தார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தவர். இவரை முன்வைத்து கட்ஜூ தெரிவித்த கருத்து சர்ச்சையையும் கிளப்பிவிட சில மணிநேரங்களில் மீண்டும் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டார்.
|
விளக்கம்
அதில், என்னுடைய கடைசி ட்வீட்டுக்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். நகைச்சுவையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்வேன் என்று பதில் கொடுத்திருக்கிறார்.
|
ப்ளாக்கிலும்.
அத்துடன் தமது http://justicekatju.blogspot.in என்ற ப்ளாக்கிலும் இது பற்றி தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் கட்ஜூ. ஒரு வயதான ஆண், அழகான பெண்ணைப் பார்த்து ஈர்ப்பு கொள்ளக் கூடாதா? நான் என்ன அவரிடம் தவறாகவாக நடந்தேன் என்று அதில் கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications