For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷீனாவின் மரபணு மாதிரிகள் மாயம் ஆகவில்லை, இந்திராணியின் மரபணுவோடு ஒப்பிடப்படும்: போலீஸ்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் கொலை செய்யப்பட்ட ஷீனா போராவின் மரபணு மாதிரிகள் மாயமாகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை செய்து அவரது உடலை எரித்தார்.

இந்நிலையில் 2012ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட ஷீனாவின் மரபணு மாதிரிகளான பிங்க் நிற உடை, உடைந்த பல் மற்றும் எலும்பு ஆகியவை கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இருந்து மாயமானதாக கூறப்பட்டது.

Sheena Bora's DNA samples not lost; will now be matched with Indrani's

மரபணு மாதிரிகள் மாயமாகவில்லை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மரபணு மாதிரிகளும், இந்திராணி முகர்ஜியின் மரபணுவோடு ஒத்துப்போகிறதா என்று பார்க்க உள்ளனர்.

ஷீனா கொலை வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Mumbai police told that DNA samples of murdered Sheena Bora was not lost as reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X