ராதே மாவின் பரபரக்க வைக்கும் அவதாரங்கள்...!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ராதே மா.. பரபரப்பான பெண் சாமியார். சமீபத்தில்தான் இவர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்குப் பாய்ந்தது.. இந்த நிலையில் ராதே மா படு ஸ்டைலான கெட்டப்களில் இருக்கும் படங்கள் வெளியாகி இன்னும் பரபரப்பைக் கூட்டியுள்ளன.

இந்தப் படங்கை ராகுல் மகாஜனும் தனது டிவிட்டரி்ல் போட்டுள்ளார் இது போக வீடியோ வேறும் வெளியாகியுள்ளது. அதில் ராதே மா டான்ஸ் ஆடுவது போல உள்ளது.

பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள ராதே மாவின் இந்தப் புதிய கவர்ச்சிப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

குட்டைப் பாவாடையுடன்

குட்டைப் பாவாடையுடன்

மினி ஸ்கர்ட் எனப்படும் குட்டைப் பாவாடையில் ஒரு படத்தில் காட்சி தருகிறார் ராதே மே. மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது அந்ந்தப் படம். ஏற்கனவே ஓவர் மேக்கப்பில் இருப்பார். இதில் இன்னும் பயங்கரமாக மேக்கப் போட்டுக் காட்சி தருகிறார்.

ப்ப்ப்ப்ப்ப்பா!

ப்ப்ப்ப்ப்ப்பா!

விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்தைத் காணோம் படத்தில் ப்ப்ப்பப்பா என்று சொல்வாரே அது மாதிரி இருக்கிறது இந்தப் படங்கள். ஒரு படத்தில் ஹாயாக சோபாவில் படுத்திருக்கிறார்.

சிவப்புக் கலரில்

சிவப்புக் கலரில்

ராதே மாவுக்குப் பிடித்த நிறம் சிவப்பு என்பதால் இந்தப் படங்களிலும் அவர் சிவப்பு நிற உடையில் காட்சி தருகிறார்.. கவர்ச்சிகரமாக அருள் பாலிக்கிறார்.

போட்டுக் கொடுத்த ராகுல் மகாஜன்

மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன், தனது டிவிட்டரில் இந்தப் படங்களைப் பாட்டு யார் என்று தெரிகிறதா என்று கேட்டு களேபரப்படுத்தியுள்ளார்.

வரதட்சணை வழக்கில் சிக்கியவர்

வரதட்சணை வழக்கில் சிக்கியவர்

சமீபத்தில்தான் வரதட்சணை வழக்கில் சிக்கினார் ராதே மா. நிக்கி குப்தா என்பவர் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராதே மா தவிர தனது கணவர், மாமானார் குடும்பம் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்துள்ளார். இதனால் போலீஸாரும் ராதே மா மீது வழக்குப் போட்டுள்ளனர்.

ஆபாச நடனம் ஆடுவதாக புகார்

ஆபாச நடனம் ஆடுவதாக புகார்

இது போக இன்னொரு புகாரும் அவர் மீது கிளம்பியுள்ளது. தனது பக்தர்களைச் சந்திக்கும் கூட்டத்தின்போது ஆபாசமாக ராதே மா ஆடுவதாகவும், மிகவும் அறுவெறுப்பான முறையில் உடலை ஆட்டுவதாகவும் கூறி புகார் கிளம்பியுள்ளது.

கும்பமேளாவுக்கு வரத் தடை

கும்பமேளாவுக்கு வரத் தடை

இத்தகைய புகார்கள் காரணமாக ராதே மா இந்த ஆண்டு நாசிக் கும்பமேளாவுக்கு வருவதற்கு சாதுக்கள் சங்கம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+