For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனி கட்சி தொடங்கிய உடனே காங்கிரஸில் ஐக்கியமாகிறார் பாஜக மாஜி எம்பி சித்து

பாஜக முன்னாள் எம்பி சித்து காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல கிரிக்கெட் வீரர் பாஜகவில் இருந்து வந்த சித்து எம்.பியாகவும் இருந்தவர். பின்னர் கட்சி மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சியை விட்டு விலகினார். அவர் ஆம் ஆத்மியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Sidhu's wife to join Congress on November 28

இருப்பினும் அவர் ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி தற்போது உடையும் நிலைக்கு வந்து விட்டது. அக்கட்சியை உருவாக்கியவர்களில் 2 முக்கியமான தலைவர்கள் தற்போது கட்சியை விட்டு விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியாகியது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக சித்து காங்கிரசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவஜோத் சிங் சித்துவும், முன்னாள் அகாலி எம்.எல்.ஏ பர்கத் சிங்கும் டெல்லியில் அம்ரீந்தர் சிங்கை சந்தித்ததாக தெரிகிறது. ஆனால் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து, அம்ரீந்தர் சிங் நவம்பர் 28 ஆம் தேதி முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைனைத் தொடர்ந்து விரைவில் சித்துவும் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Navjot Kaur Sidhu, wife of cricketer-turned-politician Navjot Singh Sidhu, will join the Congress on November 28, Punjab Congress unit chief Captain Amarinder Singh said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X