'பைக் கொடுக்காததால் ஆத்திரம்' . . 'மகனை கோடரியால் வெட்டி கொன்ற தந்தை'. . மத்தியபிரதேசத்தில் கொடூரம்
போபால்: மத்திய பிரதேசத்தில் மோட்டார் பைக் சாவியை கொடுக்க மறுத்த மகனின் கையை தந்தை கோடாரியால் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள போபாய் என்ற இடத்தில் சந்தோஷ் என்ற 30 வயது இளைஞர் வசித்து வந்தார்.
இவரது தந்தை மோத்தி கச்சி. 52 வயதான இவர் மகனுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளது.

மோட்டார் சைக்கிள் கேட்டார்
அந்த பைக்கில் தான் சந்தோஷ் அடிக்கடி வெளியில் செல்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம்போல் சந்தோஷ் வெளியே செல்வதற்காக மோட்டார் சைக்கிளை நேற்று எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த சந்தோஷின் தந்தை மோத்தி கச்சி அவசரமாக வெளியே செல்ல இருப்பதால் மோட்டார் சைக்கிளை தருமாறு சந்தோஷிடம் கூறியுள்ளார். ஆனால் சந்தோஷ், நானும் அவசரமாக வெளியே செல்ல வேண்டி உள்ளது. எனவே பைக் சாவியை தரமுடியாது என தெரிவித்துள்ளார். ஆனால் மோத்தி கச்சி மீண்டும் ஒரு முறை பைக் சாவியை கேட்டுள்ளார்.

பைக் சாவியை கொடுக்கவில்லை
அப்போதும் விடாப்பிடியாக பைக் சாவியை தரமுடியாது என சந்தோஷ் கூறிவிட்டார். இதனால் அவசர தேவைக்கு கூட பைக் கொடுக்க மறுக்கிறார் என சந்தோஷ் மீது ஆத்திரம் அடைந்தார். தொடர்ந்து தந்தை மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த மோத்தி கச்சி சந்தோசை அடித்து தாக்கினார். அப்போது மோத்தி கச்சியின் சகோதரர் ஒருவரும் சேர்ந்து சந்தோசை தாக்க தொடங்கினர். அப்பவும் சந்தோஷ் பைக் சாவியை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

கையை துண்டாக வெட்டினார்
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மோத்தி கச்சி பெற்ற மகன் என்றும் பாராமல் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து சந்தோஷின் இடது கையை துண்டாக வெட்டியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் சந்தோஷ் கத்தி அலறியபடி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சந்தோஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தின மற்றும் சந்தோஷின் தாய் ஓடி வந்துள்ளார். அவர் மகனுக்கு நேர்ந்த கதியை கண்டு கண்ணீர் விட்டார். எனினும் உடனடியாக மகனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

போலீசில் சரண்
இதற்கிடையே மகனின் கையை வெட்டிய கோபக்கார தந்தை மோத்தி கச்சி, கோடாரி மற்றும் மகனின் கையை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அளித்து விட்டு சரணடைந்தார். ரத்தம் சொட்ட சொட்ட வெட்டி எடுக்கப்பட்ட கை மற்றும் கோடரியுடம் வந்த நபரை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகன் இறந்துவிட்டதாக சந்தோஷை பரிசோதித்த டாகடர்கள் தெரிவித்து விட்டனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மோத்தி கச்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பைக் சாவி கொடுக்காத ஆத்திரத்தில் பெற்ற மகனை தந்தை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications