டெல்லி மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வைரஸ் காய்ச்சலால் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் டெல்லி ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Sonia dicharges from Delhi Hospital

மருத்துவமனையில் சோனியா காந்திக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோனியா காந்தியை அவரது மகள் பிரியங்கா மற்றும் மகனும், காங்கிரஸ் கட்சி துணை தலைவருமான ராகுல்காந்தி ஆகியோர் நேற்று சென்று பார்த்தனர்.

இந்த நிலையில் இன்று சிகிச்சை முடிந்த நிலையில் சோனியா காந்தி கங்காராம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress President Sonia Gandhi discharged from Hospital in Delhi on today.
Please Wait while comments are loading...