For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் 9: விளம்பரம் மூலம் ரூ.1, 200 கோடி வருவாயை அள்ளிய சோனி நிறுவனம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: நடந்து முடிந்த ஐபிஎல் 9வது சீசனில் விளம்பரம் மூலம் ரூ.1, 200 கோடி சம்பாதித்துள்ளது சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா(எஸ்.பி.என்.) நிறுவனம்.

ஐபிஎல் போட்டிகளை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ இந்தியா(எஸ்.பி.என்.) நிறுவனம் ஒளிபரப்பியது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது விளம்பரங்கள் மூலம் மட்டும் சோனி நிறுவனத்திற்கு ரூ.1, 200 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு சோனி நிறுவனத்திற்கு விளம்பரம் மூலம் ரூ. 1,000 கோடி வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி

சோனி

இது குறித்து எஸ்.பி.என். நிறுவனத்தின் தலைவர் ரோஹித் குப்தா கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எங்கள் வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. விளம்பரத்திற்கான கட்டணத்தை உயர்த்தியது தான் இதற்கு முக்கிய காரணம். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பின்போது விளம்பரம் செய்ய ஏராளமான நிறுவனங்கள் முன் வந்தன. போட்டிகள் துவங்கும் முன்பே விளம்பரத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் முடிந்துவிட்டது என்றார்.

சோனி சிக்ஸ்

சோனி சிக்ஸ்

சோனி மேக்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டிகள் இந்தியில் ஒளிபரப்பாகியது. மேலும் சோனி சிக்ஸ் சேனலில் ஐபிஎல் போட்டிகள் தமிழ், தெலுங்கு, பெங்காலி மொழிகளில் ஒளிப்பரப்பாகியது. சோனி சிக்ஸ் ஹெச்.டி. மற்றும் சோனி இஎஸ்பிஎன் சேனல்களில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பானது.

ஓப்போ

ஓப்போ

சீனாவை சேர்ந்த செல்போன் தயாரிப்பாளரான ஓப்போ நிறுவனம் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின்போது 240 நொடிகள் தங்கள் விளம்பரத்தை ஒளிபரப்ப வைத்தது. ஐபிஎல் போட்டிகளிலேயே ஒரு நிறுவனத்தின் விளம்பரத்திற்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது இது தான் முதல் முறை. ஐபிஎல் போட்டிகளை ஸ்பான்சர் செய்த நிறுவனங்களில் ஓப்போவும் ஒன்று.

அமேசான்

அமேசான்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் வோடஃபோன் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளின்போது தலா 210 நொடிகள் விளம்பரம் செய்தன. இரண்டு நிறுவனங்களுமே ஐபிஎல் போட்டிகளின் ஸ்பான்சர்கள் ஆகும்.

English summary
Broadcaster Sony Pictures Networks India (SPN) has mopped up Rs 1,200 crore in advertising revenue from Indian Premier League's ninth season, a growth of 20 per cent over last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X