புதிய தலைநகரம், விவேகானந்த ரெட்டி படுகொலை, முஸ்லிம் இடஒதுக்கீடு- ஆந்திரா களத்தில் 'தெறி' பிரச்சனைகள்
விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு, முன்னாள் எம்பியும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான விவேகானந்த ரெட்டியின் படுகொலை, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்கள் முதன்மை பிரச்சனைகளாக ஆக்கிரமித்திருக்கின்றன.
ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா தேர்தல் களத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனா, காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரிகள் உள்ளனர்.

ஆந்திரா தேர்தல் களத்தில் மையம் கொண்டிருக்கும் முதன்மை பிரச்சனைகள்:
சிறப்பு அந்தஸ்து: ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற வாக்குறுதி வழங்கப்பட்டது. இப்போது வரை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்படாமல் இருப்பது முதன்மை பிரச்சனைகளில் ஒன்று.
புதிய தலைநகரம்: ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி நகரம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜெகன் மோகன் ஆட்சியில் விசாகப்பட்டினம் புதிய தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. புதிய தலைநகரம் விகாரமும் ஆந்திரா தேர்தல் களத்தில் எதிரொலிக்கிறது.
நாயுடுவின் ஊழல்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டார் என கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி. 53 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார் நாயுடு. சந்திரபாபுவுக்கு எதிராக ஊழலை முதன்மை ஆயுதமாக பயன்படுத்துகிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இவற்றுக்கு அப்பால் வேலைவாய்ப்பின்மை, பண வீக்க விகிதம் ஆகியவையும் தேர்தலில் எதிரொலிக்கிறது.
விவேகானந்த ரெட்டி படுகொலை: இத்தேர்தலில் முன்னாள் எம்பி விவேகானந்த ரெட்டி படுகொலை முக்கிய இடம் பிடித்திருக்கிறது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்தா ரெட்டி படுகொலை வழக்கை ஜெகன் முறையாக விசாரிக்கவில்லை என அவருக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்திருப்பது ஜெகனின் சகோதரியும் ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாதான். இது ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடியையும் கொடுத்திருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications