For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு... 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி : 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கு விசாரணையை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கலாமா என்பது தொடர்பான வாதம், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் தொடங்கியது. அப்போது, ஆவணங்களை படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என, குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

cbi court

இதை ஏற்று வரும் 27-ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைத்தார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, கலைஞர் டிவிக்கு முறைகேடாக 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் வரும் 27-ம் தேதி இறுதிவாதம் தொடங்குகிறது.

English summary
The ongoing final arguments in the 2G spectrum allocation scam was today deferred for July 27 by a special court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X