For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின், உதயநிதி மீதான நில அபகரிப்பு வழக்கு: ஜூலை 14க்கு ஒத்திவைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீதான நில அபகரிப்பு வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் சோஷாத்ரி என்பவரது நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அபகரித்ததாகக் கூறி மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

Stalin, son on land grab case: SC adjourn on July 14

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் சேஷாத்திரிக்கு உரிய பணத்தை செலுத்தியதால் வழக்கில் சமரசம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படடது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வழக்கு விசாரணையை ஜூலை 14-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

English summary
The Supreme Court today adjourn on July 14 to former Tamil Nadu deputy Chief Minister and DMK leader MK Stalin and his son Udhayanidhi among others on land grab charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X