தொடரும் சீனாவுடனான மல்லுக்கட்டு ... தூதரக ரீதியிலான தீர்வை நோக்கி இந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் தூதரக ரிதீயில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது.

இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த பகுதி நம் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் இந்திய ராணுவம் அப்பணியை தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் நம் மீது காண்டாக உள்ளது.

 ராணுவத்தினர் குவிப்பு

ராணுவத்தினர் குவிப்பு

சர்ச்சைக்குரிய அந்த எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் 120 மீட்டருக்கு அப்பால் டென்ட் அடித்தது போல் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு நாட்டினரும் தற்போது உள்ள நிலையிலேயே உள்ளனர்.

 எந்த முன்னேற்றமும் இல்லை

எந்த முன்னேற்றமும் இல்லை

பிரச்சினை தீருவதற்கு எந்தவித நடவடிக்கையையும் இந்தியா எடுக்கவில்லை. இரு நாட்டு வீரர்களும் அவரவர் நிலைகளை மீறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

A Video Clip on the Chinese army forcibly entered in Sikkim border-Oneindia Tamil
 உயர் அதிகாரிகள் மௌனம்

உயர் அதிகாரிகள் மௌனம்

எல்லை விவகாரத்தில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர். மேலும் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அளவில் பேச இந்தியா விரும்பவில்லை. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.

 தூதரக அதிகாரிகள்

தூதரக அதிகாரிகள்

மாறாக இந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றால் தூதரக ரீதியில் கையாள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. உயரதிகாரிகள் அமைதி காத்தாலும் இந்த விவகாரத்தில் விரைவில் கூடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்துவர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The standoff with China is expected to continue longer. The Indian Army has not sought a flag meeting with China and is expected to await a diplomatic solution to the problem.
Please Wait while comments are loading...