For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கிலிருந்து வரலையாம் மனிதன்.. இப்படியும் ஒரு மத்திய அமைச்சர்

குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு தவறானது எனவும் அதை பாட புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் கூற

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஓளரங்காபாத்: குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும்
நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரில் அகில இந்திய வேதிக் சம்மேளன மாநாடு நடைபெற்றது.
இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கலந்து கொண்டார்.

Stop teaching students Darwin's theory, says MoS HRD Satyapal Singh

மாநாட்டில் பேசிய அவர், குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான டார்வின் கோட்பாடு தவறு என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய சத்யபால் சிங், குரங்கில் இருந்து மனிதன் வந்ததை நமது மூதாதையர்கள் கண்டதாகக் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார். பண்டைய கால இலக்கியம், வரலாறு, கதைகள் உள்பட எதிலுமே அத்தகைய கருத்தை நமது முன்னோர்கள் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தாத்தா, பாட்டி சொன்ன கதைகளில் கூட அவ்வாறு யாரும் குறிப்பிடவில்லை என்பதால் அதை பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் சத்யபால் சிங் ஓய்வு பெற்ற ஐ,பி.எஸ் அதிகாரி.

மும்பை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றியுள்ளார். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தன் திருமணத்துக்கு வரும் பெண்களை எத்தனை ஆண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஒரு முக்கியமான கேள்வியை ஏற்கெனவே எழுப்பி சர்ச்சையில் சிக்கியவரும் இதே சத்யபால் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Darwin’s theory scientifically wrong, nobody saw ape turning into man said Minister of State for the Ministry of Human Resource Development (HRD) Satyapal Singh on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X