கண்டுகொள்ளாத கட்சிக்காரர்கள்.. தாடி வளர்த்து புலம்பிக் கொண்டிருக்கும் சுதாகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கட்சியினர் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், சிறைக்குள் சாமியார் போல மாறிவிட்டாராம் சுதாகரன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, அவரின் அண்ணி இளவரசி மற்றும் சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால் 4 வருட தண்டனை பெற்றுள்ளனர்.

இந்த சுதாகரனைத்தான் தனது முதலாவது ஆட்சி காலத்தில் ஜெயலலிதா வளர்ப்பு மகனாக அறிவித்து, மிகப் பிரம்மாண்ட அளவில் திருமணத்தை நடத்தி வைத்தார். நாடே திரும்பி பார்த்த அந்த திருமணம்தான், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்க இன்னொரு முக்கிய காரணம்.

தனிமையில் தினகரன்

தனிமையில் தினகரன்

இந்நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா, இளவரசியோடு சுதாகரனும் அடைக்கப்பட்டிருக்கிறார். சசிகலாவும், இளவரசியும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில், ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். சுதாகரன் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்திப்பு இல்லை

சந்திப்பு இல்லை

அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில், சசிகலாவை, அக்கட்சியினர் கடந்த வாரம் வரை அவ்வப்போது சந்தித்து சென்றனர். உறவினர்களும் சந்தித்தனர். சுதாகரனை யாரும் வந்து சந்திப்பதில்லை. இதனால் மனம் வெந்துபோயுள்ளாராம் சுதாகரன்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள தினகரன் தற்போது தாடி வளர்த்து, முழு அளவில் சாமியாராக மாறிவிட்டாராம்.

சாமியார் தோற்றம்

சாமியார் தோற்றம்

திருநீறு, குங்குமம் பூசிய முகத்தோடு சதா காலமும் பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறாராம். சுதாகரன் இவ்வாறு மாறிப்போனதை அறிந்துள்ள டிடிவி தினகரன், கட்சிக்காரர்கள் சிலரை, அவ்வப்போது, சிறைக்குச் சென்று, சுதாகரனையும் சந்தித்துவிட்டு வருமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகைகள்

நகைகள்

கை நிறைய, கழுத்து நிறைய தங்கத்தில் நகைகளை வாரி இறைத்து அணிந்திருந்தவர் சுதாகரன். ஆனால் சிறைக்குள் நகை அணிய அனுமதி கிடைாயது என்பதால் அவர் கடும் மன உளைச்சலில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sudakaran, convict of asset case, becomes like a saint in Bengaluru central jail, says sources in the Bengaluru.
Please Wait while comments are loading...