ஷாஜகான் கையெழுத்துப் போட்டிருக்காரா.. காட்டுங்க.. வக்பு வாரியத்தை அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாஜ்மஹாலை ஷாஜகான் தங்களுக்கு கொடுத்துவிட்டார் என்று உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இதற்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹால் கடைசி மொகலாய மன்னன் பகதூர் ஷா ஜாபர் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை 1858ல் கைப்பற்றினார். பின்னர் சுதந்திரம் அடைந்து 1948ல் தாஜ்மஹால் அரசு சொத்து என அறிவிக்கப்பட்டது.

Sunny Waqf claims Taj Mahal, SC asks for Shah Jahans Signature!

இந்த நிலையில் தாஜ்மஹாலை ஷாஜகான் தங்களுக்கு கொடுத்துவிட்டார் என்று உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. தாஜ்மஹால் கட்டிய சில நாட்களிலேயே அது தங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 3 பேர் அமர்வு விசாரித்தது. தாஜ்மஹாலின் உரிமையை ஷாஜஹான் விட்டுக் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டு இருக்கிறார்கள். ஷாஜஹானின் கையெழுத்து பத்திரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

ஷாஜஹான் தன்னுடைய கடைசி காலத்தில் அவரது மகனால் சிறைவைக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில் எப்படி அவர் தாஜ்மஹாலை உங்களுக்கு அளித்து இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sunny Waqf claims Taj Mahal in Delhi Supreme Court. Now Super Court asks for Shah Jahan's Signature.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற