நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன்.. விஜய் மல்லையா விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன் என சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பி இருக்கிறது.
டெல்லி: விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மேலும் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டு உள்ளது.
பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் விஜய் மல்லையா. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவர் மீது உள்ள வழக்கில் ஆஜராவதற்கு பல முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விஜய்மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
மேலும் இந்த வருடம் இறுதிக்குள் விஜய் மல்லையாவை ஆஜர்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான வேலைகளில் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இன்னும் விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்படவில்லை. தற்போது இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
அதில் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன் என்று மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறது. மேலும் டிசம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது.
அதேபோல் நீதிமன்ற உத்தரவை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது. விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நாளில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதமன்றம் தெரிவித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications