For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதிகள் நியமன மசோதாவுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன மசோதாவுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கு, நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்குப் பதிலாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இதுதொடர்பான மசோதாவையும், இம் மசோதாவுக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கும் மற்றொரு மசோதாவும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Supreme Court to hear PILs challenging judges Bill on August 25

இந் நிலையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அம்மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர்.

English summary
The Supreme Court will hear petitions challenging the National Judicial Appointment Commission (NJAC) Bill on August 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X