மனைவியுடன் குடும்பம் நடத்துமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது... சுப்ரீம் கோர்ட் கருத்து!
மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: இரு மனித உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதால் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன் ஜாமின் வழங்குமாறு அந்த பைலட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மனைவியுடன் சமாதானமாக செல்வதாக விமானி ஒப்புகொண்டதையடுத்து அவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. ஆனால் ஒப்புகொண்டபடி விமானி தன்னுடைய மனைவி மற்றும் மகளை பராமரிக்காத நிலையில் அவரது ஜாமினை மதுரை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்துள்ளது.

விமானி வழக்கு
இதனையடுத்து விமானி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல் மற்றும் யு.யு.லலித் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஜாமின் தர ஒத்துக் கொள்வதாகவும் அதற்கு முன் தொகையாக விமானி ரூ. 10 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

நீதிபதிகள் மறுப்பு
அந்தப் பணத்தை விமானியின் மனைவி தனது அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த தொகையை வழக்கு விசாரணை முடிந்த பின்னர் சரி செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனுதாரர் வைப்புத் தொகையை குறைக்கும்படி நீதிபதிகளிடம் கேட்ட போதும் முன்பண தொகையை குறைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

கணவனை கட்டாயப்படுத்த முடியாது
இது குடும்ப நல நீதிமன்றமல்ல, இங்கு எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை, பணத்தை டெபாசிட் செய்தால் முன் ஜாமின் கிடைக்கும் என்று நீதிபதிகள் கராராக சொல்லிவிட்டனர். மேலும் மனித உறவுகள் தொடர்புடையது என்பதால் மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவத்துள்ளனர்.

அமலுக்கு வரும்
எனவே வழக்கு முடியும்வரை இடைக்கால நிவாரணமாகவே அவர்களுக்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முன்பணத்தை செலுத்த அந்த விமானி ஒப்புக் கொண்டு உடனடியாக பணத்தை செலுத்தினார் முன்ஜாமின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications