பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை... சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம் என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையை பெற வேண்டுமே தவிர, அனுமதியை பெற தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து 7 பேரின் விடுதலை எப்போது என்ற கேள்வி தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications