நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செல்லுமா? - சிறப்பு அமர்வை அமைத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ரத்து செய்துள்ளதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்து இருக்கிறது.
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

இம்ரான் கான் கட்சியின் பலம்
342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், அவரது அரசே கூட்டணிகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சிகளின் எம்.பிகளுமே இம்ரான் கானுக்கு எதிராக நிற்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே பார்க்கப்பட்டது.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் அதற்கு முன்னதாக தாமாகவே முன்வந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியானது. ஆனால், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானோ கடைசி பந்து வரை நின்று ஆடுவேன் என தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு
தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். வெளிநாட்டு சதி காரணமாகவே தன்னை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற சிலர் துடிப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டினார். நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வன்முறை வெடிக்க வாய்ப்புகள் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து
ஆனால் இதை சமாளிக்க தன்னிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளதாக கூறினார் இம்ரான் கான். இந்தநிலையில் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "ஒவ்வொரு பாகிஸ்தானியும் சபாநாயகரின் முடிவை வரவேற்பார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது. யார் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள். அந்நிய சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஊழல்வாதிகள் நாட்டை ஆளக்கூடாது. நான் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பாகிஸ்தானில் அரசை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளேன்." என்றார்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்ததுடன் இம்ரான் கானே காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் 90 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு
பாகிஸ்தான் துணை சபாநாயகரின் முடிவுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பே நடத்தாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாகிஸ்தான் சபாநாயகர் ரத்து செய்து இருப்பது ஜனநாயகத்துக்கே எதிரானது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற மாட்டோம். எங்கள் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற படியேறி இருக்கிறார்கள். பாகிஸ்தானின் அரசியலமைப்பை பாதுகாக்க அனைத்து நிறுவனங்களையும் அழைக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைப்பு
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால், அனைத்து நீதிபதிகளின் கூட்டத்தை கூட்டினார். அதில், துணை சபாநாயகர் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications