For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏய்.. அதென்ன கருப்பா.. யார் தெரியுதா.. பட்டப்பகலில்.. அதுவும் கோயிலுக்குள்ள.. "ஆ"வென திகைத்த மக்கள்

ஆடு ஒன்று சிவன் கோயிலுக்குள் நுழைந்து பயபக்தியுடன் வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை தருகிறது

Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் நடந்த ஒரு சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் திகைக்க வைத்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வியப்பை கூட்டி வருகிறது.

மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.. பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
எத்தனையா குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, இதுபோன்ற நாய், பூனை, முயல் போன்ற பிராணிகள் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன.,. பலமடங்கு புத்துணர்ச்சியை வாரி வழங்குகின்றன.. நம்மிடம் இந்த உயிரினங்கள் காட்டும் பாசமும், அன்பும், விசுவாசமும் எந்தவித நிபந்தனையுமற்றது..

சிவன் கோயில் கட்டுனது யாரு? ராஜராஜ சோழன் “இந்துவா”என கேட்ட வெற்றிமாறன் -எச்.ராஜாக்கு வந்துச்சே கோபம் சிவன் கோயில் கட்டுனது யாரு? ராஜராஜ சோழன் “இந்துவா”என கேட்ட வெற்றிமாறன் -எச்.ராஜாக்கு வந்துச்சே கோபம்

 சிதறுண்டு போனார்கள்

சிதறுண்டு போனார்கள்

அதேசமயம், இந்த பிராணிகளுக்கும் உணர்வுகள் உண்டு.. கோபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், வெறித்தனம், என அத்தனை உணர்வுகளும் உண்டு.. தன்னை வளர்க்கும் ஓனர்களிடம் உரிமையாக கோபப்பட்டுக் கொள்ளும்.. ஆனா, அடுத்த நிமிடமே, உற்சாகமாகத்தில் ஓடிவந்து நெருங்கி நின்று நேசத்தை கொட்டிச்செல்லும்... இந்த அன்பில் கரைந்து காணாமல் போனவர்கள் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் சிதறுண்டு கிடக்கிறார்கள்.

ஹைப்ரீட்

ஹைப்ரீட்

இதுபோன்ற நெகிழ்வு உணர்வுகள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் மட்டுமே உண்டு என்பது கிடையாது.. காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் இந்த உணர்வு உண்டு.. ஒரே ஒரு ஆடு மொத்த மனிதரையும் கலங்கடித்த நிகழ்வும் உண்டு.. கடந்த பக்ரீத் பண்டிகையின்போது, குர்பானிக்காக ஆட்டை விற்பதற்காக, அதன் ஓனர் சந்தைக்கு அழைத்து வந்தார்.. ஒருநபர் அந்த ஆட்டை விலை பேசினார்.. பிறகு ஓனரிடம் பணத்தை தந்துவிட்டு, ஆட்டை கிளப்பி கொண்டு போக முயன்றார்.. அப்போது திடீரென அந்த ஆடு, ஓனரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டது.. அந்த ஆட்டை சமாதானப்படுத்த முயன்றும் ஓனரால் முடியவில்லை..

 அடடா ஆடு

அடடா ஆடு

ஆடு காட்டிய பாசத்தை பார்த்துவிட்டு, அதை வாங்க முயன்ற நபர் விக்கித்து நின்றார்.. கடைசியில் வாங்கிய பணத்தை ஓனரிடமே திரும்ப தந்துவிட்டார்.. இப்போதும் ஒரு ஆடு, அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.. உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள பாபா ஆனந்தேஷவர் என்ற கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.. மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோயில் இது.. கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.. எனவே, இந்த கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்..

 டிவோஷனல்

டிவோஷனல்

அப்படித்தான் நேற்று முன்தினம், இந்த கோயில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது.. சாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டுள்ளது.. அப்போது திடீரென ஒரு ஆடு அங்கே நுழைந்துள்ளது.. அங்கு நின்றிருந்த பக்தர்களோடு பக்தராக சேர்ந்துகொண்டு, சன்னதி முன்பு மண்டியிட்டது.. பிறகு சாமியை பார்த்து தலை வணங்கியது.. இதை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த ஆடு பக்தர்கள் யாரையுமே எந்த தொந்தரவும் செய்யவில்லை.. மற்றவர்களும் அந்த ஆட்டை விரட்டி அடிக்கவும் முயலவில்லை..

 ஓ காட்

ஓ காட்

அந்த ஆடு யாருடையது என்றும் தெரியவில்லை.. அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்து செல்லுமா? அல்லது அங்கேயே தங்கி உள்ளதா? என்றும் தெரியவில்லை.. அப்படியே கோயிலில் தங்கியிருந்தாலும், மனிதர்களை போலவே மண்டியிட்டும், நின்றுகொண்டு பிரார்த்தனை செய்ததும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஒருவேளை மனிதர்கள் செய்வதை பார்த்து, இந்த ஆடு அப்படியே பின்பற்றி செய்திருக்கலாம் என்கிறார்கள்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது..!!

English summary
Surprise and Innovative video and what happened in the Uttar pradesh Shiva temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X