For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. பிரபாகர் மாரடைப்பால் மரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. பிரபாகர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகமா தொகுதியில் இருந்து அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரபாகர்.நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை புலிசிந்தலாவில் நீர்பாசணத் துறை சார்பில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.

TDP MLA T. Prabhakar dies of heart attack

மாலையில் உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.

1980-களில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் பிரபாகர். ரிசர்வ் தொகுதியான நத்திகமாவில் முதம் முதலில் 2009-ல் வெற்றி பெற்றார். பின்னர் 2014 தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

வழக்கறிஞராக தனது பணியை துவக்கிய பிரபாகர் அரசியலில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார். சமீப காலமாகவே அவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

English summary
The Telugu Desam Party (TDP) legislator from Nandigama Tangirala Prabhakar died at Nandigama in the district at around midnight on Sunday. The 64-year old TDP leader is survived by a son and two daughters. He suffered heart attack during midnight and breathed his last at a local hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X