For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடந்த வருடம் முதலே.. கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்தி அசத்தும் ஒடிசா அரசு

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசா அதன் அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு உள்ளது. ஆரம்பம் முதலே, ஒடிசா அரசாங்கத்தின் விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை காரணமாக, பிற மாநிலங்கள் அல்லது நாடுகளில் கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், ஒடிசாவில் பேரழிவு ஏற்படாமல் தடுக்க உதவியது.

ஒடிசாவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் திறமையான தலைமை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளின் குழு முயற்சிதான்.

Team Odisha Makes a Tectonic Shift in Ebbing Pandemic Waves

தலைமைச் செயலாளர் சுரேஷ் சந்திர மொஹாபத்ரா மற்றும் 5 டி செயலாளர் வி.கே.பாண்டியன் ஆகியோரால் கொரோனா தடுப்பு பணிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, பொதுவான பார்வை கொண்ட குழு தனது பணியைத் தொடங்கியது.

குழு முயற்சி காரணமாக குறைந்தபட்ச இறப்புகள்தான் பதிவாகின. டீம் முயற்சி நல்ல முடிவுகளை வழங்கியது என்று நாம் கூறலாம். சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், காவல்துறை, நகர்ப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, தகவல் மற்றும் மக்கள் தொடர்புகள், மிஷன் சக்தி போன்ற மாநில அரசின் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய குழுக்கள் இணைந்து செயலாற்றின. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசின் மந்திரம் ஒன்றே ஒன்றுதான், "ஒற்றுமையாக நாம் போராட வேண்டும்" என்பதுதான்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான துறைகளில் ஒன்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை. முதல் நாள் தொடங்கி, சுகாதாரத் துறை வைரஸுக்கு எதிரான கேடயம் போல முன்னணியில் உள்ளது. ஒடிசாவின் 5 டி முன்முயற்சிகள், தொற்றுநோய் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்தியாவில் வைரஸ் இருப்பதைப் பற்றி ஏற்கனவே விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோதே, சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கையை தொடங்கியது. முதல் பெரிய நிகழ்வு ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்தது. அன்று, "ஒடிசா கோவிட் -19 விதிமுறைகள் 2020க்கு" சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மூலம் மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

லாக்டவுன் அறிவிப்புக்கு முன்பே, ஒடிசா, தனியார் மருத்துவமனையின் உதவியுடன் புவனேஸ்வரில் நாட்டின் மிகப்பெரிய கோவிட் மருத்துவமனையை அமைத்தது. மிகப் பெரிய கோவிட் மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள் மற்றும் ஐசியுக்கள் போன்ற அனைத்து நவீன வசதிகளும் இருந்தன.

ஒடிசா ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோவிட் மருத்துவமனையை குறுகிய நேரத்தில் அமைத்த முதல் மாநிலமாக ஆனது. மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு போதுமான சுகாதார நிபுணர்களுடன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று, ஒடிசாவில் 83 அர்ப்பணிக்கப்பட்ட கோவிட் மருத்துவமனைகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் அவற்றில் உள்ளன.

மாநிலத்தில் ஐ.சி.யூ படுக்கைகளின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 3300 ஆக உள்ளது. ஒடிசாவின் வெற்றிக்கு மாநிலத்தின் ஒவ்வொரு மூலை மூலையிலும் கோவிட் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான அரசாங்கத்தின் ஆரம்ப கால நடவடிக்கை காரணமாக இருக்கலாம். இன்றைய நிலவரப்படி 120 சி.சி.சி.கள் 17000 க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் மாவட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கிகளும் அமைக்கப்பட்டன.

மனிதவளத்தைப் பொறுத்தவரை, ஒடிசா அரசு சில நடைமுறை முடிவுகளை எடுத்தது, இது நிலைமையை நன்கு நிர்வகிக்க உதவியது. ஜூலை 2020 இல், ஒடிசா அரசு 6798 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 7000 பயிற்சி பெற்ற பணியாளர்களை தற்காலிகமாக ஈடுபடுத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இது தவிர, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையும் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்தியுள்ளது. இன்றுவரை 77 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் பல நிறுவனங்களுக்கிடையில் ஒரு சரியான ஒருங்கிணைப்பு நிலவியது என்பதை முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தலைமையில் சுகாதாரத் துறை நிரூபித்துள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர், சுகாதாரம், பிரதீப்தா மஹபார்த்தா போன்ற டைனமிக் அதிகாரிகள், அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் குழுப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்தனர்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒடிசா தகவல் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியது. கேஸ்கள் மற்றும் தொடர்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், எதிர்கால நடவடிக்கைக்கான டேட்டாக்களை பகுப்பாய்வு செய்தல் போன்றவை விரைவான முடிவுகளை எடுக்க அரசாங்கத்திற்கு உதவியது.

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் புவியியல் தகவல் அமைப்பு மூலம் கட்டுப்பாட்டு மண்டலங்களை அடையாளம் காண உதவியது. தவிர, பொது கேள்விகளுக்கு விடை சொல்ல பிரத்யேக கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

English summary
Today, Odisha is fighting a battle against Covid-19 with all its strength and potential. The Odisha Government’s swift and effective action in the initial days and weeks of the pandemic helped it to skirt a disaster on the order of what has tragically unfolded in other states or countries. What lies behind Odisha’s success is the able leadership of Chief Minister Naveen Patnaik and a team effort by various institutions and Departments closely monitored by Chief Secretary Suresh Chandra Mohapatra and 5T Secretary VK Pandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X