உ.பி. சைக்கிள் சின்ன பஞ்சாயத்தை முன்வைத்து வாதிடப் போகும் சசி அதிமுக!
தேர்தல் ஆணையத்தில் உ.பி. சைக்கிள் சின்ன பஞ்சாயத்தை முன்வைத்து சசிகலா அதிமுக வாதிட திட்டமிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை நாடே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தேர்தல் ஆணைய விசாரணையில் உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் முடிவெடுத்தது போல இரட்டை இலை சின்ன பிரச்சனைத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என சசிகலா அதிமுக வலியுறுத்த உள்ளது.
29 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுகவின் இரட்டை இலை யாருக்கு என்ற பஞ்சாயத்து டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக ஆகிய இருதரப்பும் ஆஜராக உள்ளனர்.

இன்றைய விசாரணையின் போது சசிகலா அதிமுக முன்வைக்க உள்ள வாதங்கள்:
- பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நியமன பொதுச்செயலராக நியமித்தனர். அன்று கையெழுத்திட்டவர்கள் சுயநலனுக்காக இன்று பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்க்கின்றனர்.
- அண்ணா திமுகவில் பிளவு ஏதும் ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுகள் மட்டும்தான் நிலவுகிறது.
- இடைக்கால பொதுச்செயலர் நியமிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி பொதுச்செயலரை தேர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உள்ளாட்சி தேர்தல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அடுத்தடுத்து வந்ததால் பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியவில்லை.
- உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னர் பொதுக்குழுவைக் கூட்டி கட்சி விதிகளின் படி பொதுச்செயலரை தேர்வு செய்வோம்.
- எங்கள் பக்கமே 122 எம்.எல்.ஏக்கள் 37 எம்.பிக்கள் உள்ளனர்; கட்சியின் 95% நிர்வாகிகள் எங்கள் பக்கமே உள்ளனர்.
- ஆகையால் அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் ஆதரிக்கும் அகிலேஷ் யாதவுக்கே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்ட முன்னுதாரணத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா அதிமுக வாதிட உள்ளது.
More From
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications