For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி அரசை வலுப்படுத்தும் 'தகவல் தொழில்நுட்பம்'

By Mathi
Google Oneindia Tamil News

rajeev chandrasekhar
டெல்லி: நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் நல்ல அரசு நிர்வாகத்துக்கும் 'நவீன தொழில்நுட்பங்கள்' கை கொடுப்பவையாக இருக்கும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான ராஜிவ் சந்திரசேகர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது:

இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு புழங்குகிறது. இதில் மிகச் சிறு அளவில்தான் நாம் தேசிய வளர்ச்சிக்கும் அரசு நிர்வாகத்தை மின்னணுமயமாக்குவதற்கும் பயன்படுத்துகிறோம்.

தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்யும்போதுதான் நிர்வாக ரீதியான தேக்கங்களால் தொழில்துறை முடங்காது.

அரசு நிர்வாகத்தை மின்னணுமயமாக்குவதன் மூலம் இறுதி முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்கும். அமைச்சகங்களின் இணையதளத்தில் போதுமான தகவல்களை இடம்பெற வைப்பதன் மூலம் ஆர்.டி.ஐ.யுடன் பொதுமக்கள் மல்லுக்கட்ட வேண்டியதாக இருக்காது.

நாடாளுமன்ற விவாதங்கள், அமைச்சரவைக் கூட்ட முடிவுகள், நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான அறிக்கைகள், விவாதங்கள் ஆகியவற்றை பகிரங்கபடுத்தலாம்.

ஆவணங்கள், விண்ணப்பங்களை ஆன்லைனில் வெளியிடலாம். அமைச்சகங்களை கணிணிமயமாக்கி அலுவலர்கள் பற்றிய தகவல்களை ஆன்லைனில் வெளியிடுவதன் மூலம் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

இப்படி செய்யும் போது பிரதமரின் 10 அம்ச செயல்திட்டம் எளிதில் மக்களை சென்றடையும்.

இவ்வாறு ராஜிவ் சந்திரசேகர் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The recent list of top 10 priorities released by the Prime Minister's Office goes beyond being a list of priorities. It defines the framework and specific steps that the Narendra Modi-led government plans to take to pull the country out of the morass in which UPA left it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X