காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இளம்பெண் பலி!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பூஞ்ச் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றும் எல்லையோரப் பகுதிகளில் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், கிக்ரியால் பகுதியில் ஸாகிரா அக்தர் என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+