Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரம்! தென்காசியில் கரடி கடித்து குதறியதில் 3 பேர் கவலைக்கிடம்.. குலைநடுங்க வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசியில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை ஆண் கரடி நடத்திய பயங்கர தாக்குதலில் 3 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரடி ஒருவரை பிடித்து அவரது முகம் மற்றும் கழுத்து சதைகளை கடித்து தின்னும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தக் கரடி தாக்குததலால் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வனவிலங்குகளால் தொடரும் ஆபத்து..

வனவிலங்குகளால் தொடரும் ஆபத்து..

தென்காசி மாவட்டம் தமிழக - கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் காரணமாக, தென்காசியின் பெருமளவிலான நிலப்பரப்புகள், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளுக்கு அருகே உள்ளன. மேலும், இந்த வனப்பகுதிகள் யாவும் பல்லுயிர் பெருக்கம் நிறைந்தவை என்பதால், புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வன விலங்குகள் இங்கு அதிகம். இதனால் அவ்வப்போது அங்குள்ள வனப்பகுதிகளில் இருந்து ஊர்களுக்குள் இதுபோன்ற வனவிலங்குகள் நுழைவது வாடிக்கை. சில நேரங்களில் இந்த வனவிலங்குகளால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டு விடுகிறது.

ஊருக்குள் புகுந்த ஒற்றைக் கரடி..

ஊருக்குள் புகுந்த ஒற்றைக் கரடி..

இந்நிலையில், தென்காசி அருகே உள்ள கடையம் பகுதியைச் சேர்ந்த வைகுண்டமணி (46) என்ற வியாபாரி, நேற்று காலை வழக்கம் போல கடைக்கு தேவையான மசாலா பொருட்களை வாங்க சென்றுள்ளார். இதற்காக சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை கிராமத்துக்கு அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அங்கிருந்த புதருக்குள் மறைந்திருந்த பெரிய ஒற்றை ஆண் கரடி அவரை துரத்தியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வைகுண்டமணி, மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல முற்பட்டார். ஆனால் விடாமல் துரத்திய கரடி, அவர் மீது பாய்ந்து கீழே தள்ளியது.

கடித்து குதறிய பயங்கரம்..

கடித்து குதறிய பயங்கரம்..

இதையடுத்து, வைகுண்டமணி சுதாரிப்பதற்குள்ளாக அவரை கரடி கடுமையாக தாக்கியது. இதில் அவரது அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அங்கு வந்து கரடியை விரட்டுவதற்காக கற்களை தூக்கி எறிந்தனர். ஆனால், கரடி விடாமல் அவரை கடித்து குதறியது. அவரது முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் உள்ள சதைகளை அது கடித்து தின்றது. இதன் தொடர்ச்சியாக, அங்கு அதிக அளவிலான மக்கள் கூடி கரடியை விரட்ட முயற்சித்தனர்.

3 பேரும் கவலைக்கிடம்..

3 பேரும் கவலைக்கிடம்..

அப்போது மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த கரடி, அங்கிருந்த பெத்தான்பிள்ளை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (40), சைலப்பன் (50) ஆகியோரையும் விரட்டி விரட்டி கடித்துவிட்டு ஓடி மறைந்தது.. இதில் அவர்களும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் அங்குள்ளவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக ரத்தம் வெளியேறியதால் மூன்று பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். இந்நிலையில், வைகுண்டமணியை கரடி கடித்து குதுறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+