ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
இம்பால்: மணிப்பூரில் லோக்சபா தேர்தலின் போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டால் ஆத்திரமடைந்த மக்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் மிகவும் பதற்றமான மாநிலமாக மணிப்பூர் அறியப்பட்டிருந்தது. மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என இரண்டு தொகுதிகள் இருக்கின்றன. இரண்டு தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிற்பகல் சுமார் 2 மணியளவில் துப்பாக்கிகளுடன் வாக்குப்பதிவு மையத்தை நோக்கி வந்த மர்ம நபர்கள், வானத்தை நோக்கி சுட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தம்னாபோக்பி என்ற இடத்தில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரண்டு நபர்கள் கையில் நவீன ரக துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடியை நோக்கி ஓடும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல, இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மர்ம நபர்களை தடுக்கவில்லை. இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர் போலீசாரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மற்றொரு பகுதியான இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள யூரிபோக் மற்றும் இரோயிஷெம்பா கெய்ராவ் ஆகிய இடங்களில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களை விரட்டியடிக்க முயன்றுள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் மின்னணு வாக்கு பெட்டி இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உள் மணிப்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அங்கொம்சா பிமோல் அகோய்ஜாம், போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். மணிப்பூர் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
ஏற்கெனவே மணிப்பூரில் பற்றி எரிந்த வன்முறை இன்னும் அடங்காத நிலையில், தற்போது புதிய கலவரம் வெடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications