புத்தகயா கோவிலுக்கு தாய்லாந்தில் இருந்து 300 கிலோ தங்கம் வருகை
பாட்னா: பீகாரில் உள்ள மகாபோதி கோவிலின் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசுவதற்காக பக்தர்கள் நன்கொடையாக அளித்த 300 கிலோ தங்கத்தை 24 தாய்லாந்து கமாண்டோக்கள் பாதுகாக்கின்றனர்.
பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள 1,500 ஆண்டு பழமை வாய்ந்த மகாபோதி கோவிலின் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்படவிருக்கிறது. இதற்காக தாய்லாலந்தில் உள்ள பக்தர்கள் நன்கொடையாக அளித்த 289 கிலோ தங்கம் பேங்காக்கில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பீகாருக்கு வந்துள்ளது. கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணியை செய்ய தாய்லாந்தில் இருந்து நிபுணர்கள் வந்துள்ளனர். தாய்லாந்து நிபுணர்கள் தங்கள் பணியை துவங்கிவிட்டனர்.

இது குறித்து கோவில் குழு உறுப்பினர் அரவிந்த் குமார் சிங் கூறுகையில்,
தாய்லாந்து நிபுணர்களின் பணி வீடியோ எடுக்கப்படுகிறது. 24 நிபுணர்கள், 24 கமாண்டோக்கள் என 40 பேர் கொண்ட குழு 13 பெட்டி நிறைய தங்கத்துடன் புத்தகயா வந்துள்ளது. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க பெட்டிகளுக்கு 24 தாய்லாந்து கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்றார்.
கமாண்டோக்கள் தவிர மாவட்ட நிர்வாகமும் கூடுதலாக பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் வேலையில் தாய்லாந்தைச் சேர்ந்த கிரீங் தவோர்ன் கன்டெய்னர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தங்க முலாம் பூசும் முடிவை தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யா கடந்த ஆண்டு எடுத்தார்.
இந்த கோவிலில் தான் கடந்த ஜூலை மாதம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications