For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: சித்தராமையா பேட்டி

Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது:

பெங்களூர் வெறும் கர்நாடக நகரம் கிடையாது. அது சர்வதேச நகரம். அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலான கலவரங்களுக்கு அனுமதிக்க முடியாது.

siddhu

சட்டம்-ஒழுங்கு என்பது கர்நாடகாவுடன் மட்டுமே சம்மந்தப்பட்ட பிரச்சினை கிடையாது. தமிழகத்துடனும் தொடர்புள்ளது. இரு மாநிலங்கள் நடுவே மக்கள் போக்குவரத்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களும், தமிழகத்தில் கன்னடர்களும் வசிக்கிறார்கள். எனவே சட்டம்-ஒழுங்கு சீர்கெட விடவே மாட்டோம். கர்நாடகாவிலுள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்கும். சட்டம்-ஒழுங்கை கையில் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீடியாக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வீடியோக்களை டிவி சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது. தயவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

English summary
The Tamil speaking people will be protected. We also appeal that the Kannadigas in Tamil Nadu are protected. I appeal to the TN government. It will help us all if television channels stop showing visuals that will incite violence. I also appreciate those in the media who are appealing for peace.Bengaluru is an international city. This is brand Bengaluru, let us all protect it, says Siddaramaiah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X