For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாக்கலானது மத்திய பட்ஜெட்.. பெரிய சலுகைகள் இல்லை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

The Union Budget will be present today

இதை தொடர்ந்து 2016-17 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி, 2017-18ம் நிதி ஆண்டுக் கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் நடைமுறை நிறுத்தப்பட்டு, பொதுபட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்தார்.

இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட சில சலுகைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அப்படிப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

English summary
The Union Budget will be present today. It is being keenly watched for measures to spur employment and skilling, particularly in the context of increasing urbanisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X