நலத்திட்டங்கள் மூலம் அனைவரும் பயனடைவதை உறுதி செய்ய புதிய யோசனை! மாஸ் காட்டும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்யவும், மாநிலத்தின் குடும்ப அலகுகளின் நேரடி விரிவான தரவுத்தளத்தை உருவாக்கவும் 'ஒரு குடும்பம் ஒரு அடையாளம்' திட்டத்தின் கீழ் குடும்ப ஐடியை உருவாக்குவதற்கான போர்ட்டலை உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மாநில அரசு மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இதற்காக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல புதிய திட்டங்களும் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாதான் தற்போது 'ஒரு குடும்பம் ஒரு அடையாளம்' எனும் திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இதன் மூலம், ரேஷன் கார்டு இல்லாத மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத குடும்பங்கள் குடும்ப அட்டையை விண்ணப்பித்துக்கொள்ளலாம். அதேபோல தற்போது வரை இந்த திட்டத்தில் சேர்ந்த குடும்பங்களின் முழு விவரங்களையும் அரசு ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது. குறிப்பாக வீட்டில் எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை இருக்கிறதா? மூத்த குடிமக்கள், பெண்கள் எத்தனை பேர்? அவர்களுக்கான உதவி தொகைகள் கிடைக்கிறதா? போன்ற தகவல்களை அரசு சேகரித்து வருகிறது.
இந்த தகவல்களை கொண்டு அனைத்து குடிமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்று சேருகிறதா? என்பதை அதிகாரிகள் அறிந்துக்கொண்டு அதற்கேற்ப செயலாற்றுவார்கள். அதேபோல வேலைவாய்ப்புகளிலும், இந்த தகவல்களிலிருந்து சேகரிக்கப்படும் தகவல்களை கொண்டு வேலை வாய்ப்பும் வழங்கப்படும். தற்போது உ.பியில் சுமார் 15 கோடி பேர் உத்தரப் பிரதேசத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இதில் விடுபட்டவர்கள் https://familyid.up.gov.in/portal/index.html என்ற போர்டல் மூலம் குடும்ப அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் 12 இலக்க ஐடி எண்ணை உருவாக்கி கொடுக்கும். தற்போது வரை 78 ஆயிரம் அப்ளிகேஷன்கள் வந்திருப்பதாகவும், இதில் 37 ஆயிரம் அப்ளிகேஷன்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications