என்ன எனக்கு மட்டும் பீஸ் குறையுது.. கறியால் வெறியான நண்பன்.. வெட்டி குழிதோண்டி புதைத்த ஷாக் சம்பவம்
அமராவதி : ஆந்திராவில் இறைச்சி விருந்தில் கறித்துண்டுகள் குறைவாக இருந்ததால் தகராறு செய்த இளைஞரை அவரது நண்பர்களே வெட்டிக் கொலை செய்து குழி தோண்டி புதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர்கள் ஷேர்கான், சிவா. நண்பர்களான இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது விருந்தில் உணவு பரிமாறிக்கொண்டிருந்த ஷேர்கான், சிவாவுக்கு மற்றவர்களை விட இறைச்சி துண்டுகளை குறைவாக போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவா அன்று இரவு ஷேர்கானை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அங்கு பெரும் பிரச்சினை உருவான நிலையில், இதுகுறித்து ஷேர்கான் அளித்த புகாரின் பேரில் கடப்பா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிவாவை, ஷேர்கான் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சந்தித்துள்ளார். நமக்குள் பிரச்சினை எதற்கு வா சமாதானம் பேசலாம் என்று கூறி ஷேர்கான், சிவாவை தனியே அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு சிவாவை அழைத்து ஷேர்கான் உள்ளிட்டோர், சிவாவை வெட்டிக்கொலை செய்யதுள்ளனர். பின்னர் உடலை ஆட்டோவில் ஏற்றி புறநகர் பகுதிக்கு கொண்டு சென்று, பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இந்நிலையில் தனது மகனை காணவில்லை என சிவாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஷேர்கான் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது 3 பேரும் சேர்ந்து சிவாவை கொன்றதை ஒப்புக்கொண்டனர். இரவு விருந்தில் இறைச்சித் துண்டுகளை குறைவாக வைத்ததற்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications