ரஹ்மானைப் பார்த்ததும் நடுங்கிப் போய் விட்டேன்.. சிலாகிக்கும் நதாலி
மும்பை: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஈரான் நாட்டு திரைப்படமான முகம்மது படத்தில் ஒரு கனடா நாட்டு இசைக் குயிலின் குரல் அழகுற இடம் பெற்றுள்ளது. அதுவும் அரபியில் அவர் பாடியுள்ளார். இத்தனைக்கும் இந்தப் பாடகிக்கு சுத்தமாக அரபி தெரியாதாம். ஏ.ஆர். ரஹ்மான்தான் உச்சரிப்பைக் கற்றுக் கொடுத்துப் பாட வைத்துள்ளார்.
ரஹ்மான் இசையில் தான் பாடிய இந்த அரபிப் பாடலை வாழ்நாள் சாதனையாக கருதுவதாக கூறுகிறார் பாடகி நதாலி டி லூச்சியோ. கனடாவைச் சேர்ந்த இவர் தனது தாய் மொழி தவிர பல்வேறு நாட்டு மொழிகளில் பாடிய சாதனை படைத்தவர் ஆவார்.
இவரது தந்தை இத்தாலியைச் சேர்ந்தவர். தாயார் கனடாவைச் சேர்ந்தவர். தாய் தந்தை மொழியைத் தவிர பல மொழிகளில் பாடும் திறன் படைத்த இவருக்கு அதில் பாதிக்கும் மேற்பட்ட மொழியில் ஏபிசிடி கூடத் தெரியாது என்பது சுவாரஸ்யமானது.

முகம்மது படப் பாடல்
ஈரான் நாட்டுப் படமான முகம்மது படத்தின் பாடலைப் பாட வருமாறு ஏ.ஆர். ரஹ்மான் அழைத்தபோது இவர் பெரும் கெளரவமாக உணர்ந்தாராம். அந்த அனுபவம் குறித்து நதாலி கூறுகையில், ரஹ்மான் என்றாலே எனக்கு டென்ஷனாகி விடும். காரணம் அவரது தொழில் நேர்த்தி. நான் அவரைச் சந்தித்தபோது எனக்கு நடுக்கமாகி விட்டது.

அரபிப் பாடல்கள்
என்னை அமர வைத்து பாடல்களை விளக்கிய ரஹ்மான் அவை அரபி மொழிப் பாடல்கள் என்று கூறியபோது சற்று குழப்பமாகி விட்டது. காரணம், எனக்கு சுத்தமாக அரபி தெரியாது.

சொல்லிக் கொடுத்தார்
ஆனால் ரஹ்மான் சார் எனக்குத் தைரியமூட்டி அழகாக சொல்லிக் கொடுத்தார். வரிகளின் அர்த்தம், எப்படி உச்சரிப்பது என்பதை சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்னதை அப்படியே செய்தேன் என்றார் அவர்.

ஐ படத்தில் முதல் அனுபவம்
இவருக்கு ரஹ்மானுடன் முன்பே நல்ல அறிமுகம் உள்ளது. அதாவது ஐ படத்தில் இடம் பெற்ற அய்லா அய்லா பாடலை ஆதித்யா ராவுடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்திப் படங்களில் பிசி
இப்போது இந்திப் படங்களிலும் பிசியாக பாடி வருகிறார் நதாலி. சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட சில படங்களில் பாடியுள்ளார். மும்பையை தனது 2வது வீடாக மாற்றிக் கொண்டு இறக்கை கட்டிப் பறக்கிறார் இந்த இத்தாலி நதாலி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications