பஞ்சாப் வங்கி முறைகேட்டில் முக்கிய புள்ளி சிக்கினார்.. மும்பை ஏர்போர்ட்டில் 'தூக்கியது' சிபிஐ
டெல்லி: கீதாஞ்சலி குரூப் நிறுவனங்களின் துணை தலைவர் விபுல் சைத்தாலியாவை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.12,600 கோடி முறைகேடுகளில் மூளையாக இருந்தவர் இவர்தான் என்று சிபிஐ தெரிவிக்கிறது.
கீதாஞ்சலி ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் சேர்மேனுமான மேகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் வங்கியில் இவ்வளவு பெரிய அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட மூளையாக இருந்தது விபுத்ல சைத்தாலியா என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்ரன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 19வது நபர் சைத்தாலியாவாகும். பஞ்சாப் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ 2 எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது. முதல் எப்ஐஆரில் நீரவ் மோடி அவர் மனைவி அமி, சகோதரர் நிஷால், உறவுக்காரர் மேகுல் சோக்சி உள்ளிட்ட பலர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. 2வது எப்ஐஆரில் மேகுல் சோக்சி மற்றும் அவரது கீதாஞ்சலி ஜுவல்லரி தொடர்பானவர்கள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இரு எப்ஐஆர்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விபுல் சைத்தாலியாவுக்கு மார்ச் 17ம் தேதிவரை சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளது.
பேங்காங்கில் இருந்து மும்பை வந்தபோது ஏர்போர்ட்டில் வைத்தே அலேக்காக தூக்கிவிட்டது சிபிஐ. முன்னதாக சைத்தாலியாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசையும் சிபிஐ பிறப்பித்திருந்தது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications