இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறதா சமாஜ்வாடி.. அகிலேஷ் யாதவின் பதிவால் அதிரும் எதிர்க்கட்சிகள்
இம்பால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சீட் ஒதுக்காததால் கடும் அதிருப்தியில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், அகிலெஷ் யாதவின் சமூக வலைதள பதிவு எதிர்க்கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஆனாலும், ஜோதிராதித்ய சிந்தியாவை வைத்து பாஜக செய்த சித்து வேலையின் காரணமாக அங்கு ஆட்சி கவிழ்ந்தது.

சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜக 2020 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. இதனால், இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் சில தொகுதிகளில் போட்டியிட விரும்பியது.
அகிலேஷ் யாதவ் கோரிக்கை: ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதால், தங்களுக்கும் சீட் வேண்டும் என்பது அகிலேஷ் யாதவின் கோரிக்கை.. ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால், அதிருப்தி அடைந்த அகிலேஷ் யாதவ் கடந்த சில நாட்களாவே காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து கொண்டு இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உள்ளது. இதனால், அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கள் இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு பக்கம் பாஜக இதையெல்லாம் மவுமனாக ரசித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் அகிலேஷ் யாதவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கூட்டணியில் இருந்து விலகுகிறாரா: சமாஜ்வாடி கட்சி தொண்டர் ஒருவர் கட்சி கொடி வர்ணத்தில் இந்தியில் சில வாசகஙக்ளை தனது முதுகில் எழுதியுள்ளார். அதாவது, மிஷன் 2024 . நேதாஜி (முலாயம் சிங்யாதவ்) புகழ் மறையாமல் இருக்கட்டும். அகிலேஷ் யாதவ் வெற்றியை PDA இந்த முறை உறுதி செய்யும். ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பதை அகிலேஷ் யாதவ் உறுதி செய்வார்" என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த புகைப்படத்தை தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு இருக்கும் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணி பற்றி எதுவுமே பதிவிடவில்லை.
இது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்தியா கூட்டணி மீதான தனது அதிருப்தியை தொடர்ந்து வெளியிட்டு வரும் அகிலேஷ் யாதவ் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்து விட்டாரா? என்றெல்லாம் கூட அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 70 லோக்சபா தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக கடந்த இரண்டு தேர்தல்களிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
கவனிக்கும் பாஜக: பாஜக இம்முறையும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களை மொத்தமாக வெல்ல வேண்டும் என கணக்கு போட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவின் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகினால் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். இந்தியா கூட்டணிக்குள் நடந்து வரும் இந்த நிகழ்வுகளை எல்லாம் பாஜக ஒருபக்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications