உலகின் பணக்கார கடவுள்.. திருப்பதி கோயிலின் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை இவ்வளவா! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில், ஏப்ரல் மாத காணிக்கையாக ரூ.102 கோடி கிடைக்க பெற்றிருக்கிறது. ஏப்ரலில் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

தென்னிந்தியா மட்டுமல்லாது உலகமே வியந்து நோக்கும் கோயிலாக திருப்பதி இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு சென்று வருவது என்பது ஏறத்தாழ அனைத்து இந்து குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது நடக்கும் தெய்வீக சடங்காகும். நல்ல விஷயம், மோசமான அனுபவம், எதிர்பார்ப்பு, காத்திருப்பு என அனைத்து உணர்வுப்பூர்வமான சூழல்களுக்கு முன்னும், பின்னும் திருப்பதிக்கு சென்று வருவது காலங்காலமாக இருந்து வருகிறது.

Tirumala Tirupati temple has received Rs 102 crores as money hundi in the month of April alone

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வது என்பது திருவிழாவுக்கு செல்வதை போன்றது. அதற்கான தயாரிப்புகள் ஏறத்தாழ ஒரு வாரம் முன்பிருந்தே தொடங்கப்படும். உணவு, உப கோயில்களை பார்ப்பதற்கான திட்டமிடல், வேண்டுதல், வேண்டுதலுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள காசு, உறவினர்களை ஒருங்கிணைப்பது என பக்தி பரவச உணர்வோடு, இனம் புரியாத ஆன்ம மகிழ்ச்சியும் நம்மை ஆட்கொண்டுவிடும்.

இப்படியாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் இக்கோயிலுக்கு வந்து சென்றிருக்கிறார்கள். இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஏவி தர்மா ரெட்டி கூறுகையில், "ஏப்ரல் மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்திருக்கிறார்கள். 8 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்திருக்கிறார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாங்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஏப்ரலில் 94 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. 40 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டிருக்கிறது. பக்தர்களின் வருகைக்காக பிரத்யேக ஏற்பாடுகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் திருமலை கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.102 கோடி கிடைத்திருக்கிறது என்றும் தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது.

உலகின் வேறு எந்த கோயிலிலும் இல்லாத அளவுக்கு திருப்பதியில் அதிக அளவு பணம் கொட்டுகிறது. இக்கோயிலிலிருக்கும் உண்டியல் மற்ற கோயில்களை காட்டிலும் வித்தியாசமானது. எல்லா கோயிலிலும் கருவறைக்கு முன்பு உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், திருப்பதியில், கருவறையை சுற்றி வரும் இடத்தில்தான் உண்டியலை வைத்திருப்பார்கள்.

இந்த உண்டியல் துணியால் ஆனது. ஒருமுறை உண்டியல் நிரம்பிவிட்டால் அதை உடனே அங்கிருந்து சீல் வைத்து கருவூலத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்கள். ஆரம்ப காலத்தில் சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் இல்லாத போது, வித்தியாசமான வழக்கம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது உண்டியல் நிரம்பும் போது அடுத்து காசு போட வரிசையில் காத்திருந்த இருவரை கோயில் நிர்வாகம் அழைக்கும்.

அவர்கள் முன்னிலையில் காசு நிரம்பிய உண்டியல் சீல் வைக்கப்பட்டு கருவூலத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இதற்காக அந்த இரண்டு பக்தர்களிடம் சாட்சி கையெழுத்து பெறப்படும். இப்படி கையெழுத்து போடுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில், அவர்கள் இருவருக்கும் சிறப்பு தரிசன அனுமதி கிடைக்கும். மற்ற பக்தர்களை விட இவர்கள் பெருமாளை நெருக்கமாக தரிசிக்கலாம். இவர்களை மட்டும் யாரும் ஜருகண்டி, ஜருகண்டி என சொல்ல மாட்டார்கள்.

இந்த நடைமுறை சிசிடிவி கேமராக்கள் வந்த இந்த காலத்திலும் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+