For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லா வேலையும் முடிந்தது.. எப்போது வேண்டுமானாலும் காங். வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்

|

டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் லோக்சபா வேட்பாளர்களின் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலை வந்துள்ளது.

வேட்பாளர் பட்டியலில் திருத்தம், சேர்ப்பு, நீக்கம் என அனைத்து வேலைகளையும் முடித்து விட்டதாம் தமிழக காங்கிரஸ் கமிட்டி. அந்த இறுதிப் பட்டியலும் கூட கட்சி மேலிடத்தின் ஒப்புதலைப் பெற்று விட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் பட்டியல் வெளியாகலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

39 தொகுதிகளிலும்

39 தொகுதிகளிலும்

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது காங்கிரஸ். கூட மாட அணி சேர யாருமே இல்லாததால் தனித்துப் போட்டியிடுகிறது. புதுவையில் அது தனது வேட்பாளரை ஏற்கனவே அறிவித்து விட்டது.

ஞானதேசிகன் டெல்லியில்

ஞானதேசிகன் டெல்லியில்

தமிழக வேட்பாளர் பட்டியலுடன் ஞானதேசிகன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். முதலில் அவர் கொடுத்த பட்டியல் நிராகரிக்ப்பட்டது. பழைய ஆட்களை,த் தூக்கி விட்டு நிறைய புதுமுகங்களை, இளைஞர்களை சேர்க்குமாறு ராகுல் காந்தி உத்தரவிட்டார். அதன்படி பட்டியலைதை் திருத்தினர்.

திருத்தப் பட்டியல் சோனியாவிடம்

திருத்தப் பட்டியல் சோனியாவிடம்

தற்போது திருத்தப்பட்ட பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் பார்த்து ஓ.கே சொன்னதும் பட்டியல் வெளியாகுமாம்.

கார்த்தி சிதம்பரத்திற்கு சீட்

கார்த்தி சிதம்பரத்திற்கு சீட்

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு டிக்கெட் கிடைக்கும் என்று கூறப்புகிறது. அதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத்துக்கும் டிக்கெட் கிடைக்கும் என்கிறார்கள்.

சித்தன் கன்பர்ம்ட்

சித்தன் கன்பர்ம்ட்

தற்போது எம்.பிக்களாக உள்ள என்.எஸ்.வி.சித்தன், மாணிக் தாகூர், அழகிரி, ஜே.எம். ஹாரூண் ஆகியோருக்கும் கண்டிப்பாக சீட் உண்டாம்.

சாருபாலா தொண்டைமான்

சாருபாலா தொண்டைமான்

முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் திருச்சியில் நிறுத்தப்படுவதாக தெரிகிறது.

இளங்கோவனுக்கு ஈரோடுதான்

இளங்கோவனுக்கு ஈரோடுதான்

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் நிறுத்தப்படுகிறார். அவர் திருப்பூர் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர்

ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர்

முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ராமநாதபுரத்தில் நிறுத்தப்படுகிறார்.

கன்னியாகுமரியில் குமரி அனந்தன் தம்பி

கன்னியாகுமரியில் குமரி அனந்தன் தம்பி

காங்கிரஸ் துணைத் தலைவர் வசந்தகுமார், கன்னியாகுமரியில் நிறுத்தப்படுகிறார். இவர் குமரி அனந்தன் தம்பி ஆவார்.

மணிசங்கருக்கு மயிலாடுதுறை

மணிசங்கருக்கு மயிலாடுதுறை

மணிசங்கர அய்யருக்கு மயிலாடுதுறை தொகுதி தரப்படுகிறதாம்.

English summary
Sources in Delhi say that Congress high command may release its candidates for Tamil Nadu at any time as the final list is ready.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X