ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ

  டெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு இதே தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

  கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை செய்தார். அதாவது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்பதுதான். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  மக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. அதிலும் ஒரு நாளைக்கு ரூ.4000 மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

   மக்கள் அவதி

  மக்கள் அவதி

  இதற்காக அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு பெரும்பாலானோர் கால் கடுக்க வங்கி வாயில்களிலும், தபால் நிலையங்களிலும் நின்றிருந்தனர். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பிரதமர் மோடி விளக்கினார்.

   கருப்பு பணம் சிக்கவில்லை

  கருப்பு பணம் சிக்கவில்லை

  கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்றாலும் அந்த வரிசைகளில் நிற்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழை மக்களே ஆவர். கூலித் தொழிலாளிகள் ஒரு நாள் கூலியை இழந்துவிட்டு காத்திருந்தனர்.

   சில்லறை தட்டுப்பாடு

  சில்லறை தட்டுப்பாடு

  ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது. சின்னஞ்சிறிய செலவுகளுக்கு டிஜிட்டல்மயத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

   கருப்பு பணம் டெபாசிட்

  கருப்பு பணம் டெபாசிட்

  அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளியை சென்றடைய வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட கருப்பு பண முதலைகள் ஏழை மக்களுக்கு சில பணத்தை கமிஷனாக கொடுத்து தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை அவர்களின் கணக்கில் வரவு வைத்த சமபவங்களும் நிகழ்ந்தன.

   எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

  எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

  பணமதிப்பிழப்பால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இன்றுடன் ஓராண்டு ஆகியும் அந்த நடவடிக்கைக்கு இன்னும் எதிர்ப்புகள் நிலவித்தான் வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Demonetisation anniversary celebrated by Central government and still one year gone, Opposition parties opposes the note ban.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற