For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிபுராவில் திரிசங்கு நிலையில் பாஜக அரசு? மமதா பானர்ஜி கட்சிக்கு தாவும் பாஜக எம்.எல்.ஏ.!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தைத் தொடர்ந்து திரிபுராவிலும் பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர். இதனால் திரிபுராவில் ஆளும் பாஜக அரசு ஆட்டம் காண்பது உறுதியாகி உள்ளது.

திரிபுராவில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத ஒரு கட்சியாகத்தான் பாஜக இருந்தது. திடீரென ஒட்டுமொத்தமாக திரிபுரா காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்தது பாஜக.

இதனால் திரிபுராவில் காங்கிரஸ் அழிந்து அங்கே பாஜக என்கிற கட்சி வலுவானது. திரிபுராவில் கோட்டையாக வைத்து ஆண்ட இடதுசாரிகளிடம் இருந்து ஆட்சியை பறித்தது பாஜக.

என்னாது டெக்னிக்கல் இஷ்யூவா.. இது தெரியாம ரீஸ்டார்ட் செஞ்சி.. கடைசில போன்தான் ரிப்பேர்னு நெனச்சேனே! என்னாது டெக்னிக்கல் இஷ்யூவா.. இது தெரியாம ரீஸ்டார்ட் செஞ்சி.. கடைசில போன்தான் ரிப்பேர்னு நெனச்சேனே!

 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

ஆனால் திரிபுராவில் ஆட்சியை பாஜக கைப்பற்றிய நாள் முதலே உட்கட்சி பூசல் உச்சகட்டமாகத்தான் நடந்து வருகிறது. அண்மையில் திரிபுரா முதல்வரை மாற்றியே ஆக வேண்டும் என சில எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கு படையெடுத்தனர். பின்னர் கட்சித் தலைமை அவர்களை சமாதானப்படுத்தியது.

 திரிணாமுல் தாவிய பாஜக எம்.எல்.ஏக்கள்

திரிணாமுல் தாவிய பாஜக எம்.எல்.ஏக்கள்

அதேபோல் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதனால் பாஜகவுக்குப் போன திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மீண்டும் தாய்கட்சிக்கே திரும்பினர். இதுவரை 5 எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி என பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

 திரிபுராவில் திரிசங்கு நிலை

திரிபுராவில் திரிசங்கு நிலை

இதேபார்முலாவைத்தான் வங்காள மக்கள் வாழும் வடகிழக்கு மற்றும் கோவாவிலும் பாலோ அப் செய்கிறது திரிணாமுல் காங்கிரஸ். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவித்த போதே திரிபுராவில் பாஜக அரசுக்கான ஆட்டத்தை திரிணாமுல் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அப்போதே பாஜக எம்.எல்.ஏக்கள் கொத்தாக திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாக கூறப்பட்டது.

 பாஜகவில் இருந்து விலகும் எம்.எல்.ஏ.

பாஜகவில் இருந்து விலகும் எம்.எல்.ஏ.

பின்னர் இந்த விவகாரம் அடங்கிப்போனது. தற்போது மீண்டும் பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவும் படலத்தை அரங்கேற்ற உள்ளனர். திரிபுரா பாஜக எம்.எல்.ஏ ஆஷிஸ் தாஸ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை ரொம்பவே புகழ்ந்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் மமதா பானர்ஜிதான் என புகழ்ந்துள்ளார். அத்துடன் பிரதமர் மோடியையும் பாஜக எம்.எல்.ஏ கடுமையாக சாடியிருக்கிறார். அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியையும் கொல்கத்தாவில் ஆஷிஸ் தாஸ் சந்தித்து பேசினார்.

 திரிபுரா பாஜக அரசு கவிழுமா?

திரிபுரா பாஜக அரசு கவிழுமா?

அத்துடன் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற காளி கோவிலுக்கு சென்று ஆஷிஸ் தாஸ் வழிபாடு நடத்த உள்ளார். அப்போது பாஜகவுக்காக இத்தனை ஆண்டுகாலம் வேலை செய்ததற்காக மன்னிப்பும் கேட்க உள்ளார். இதன்பின் பாஜகவில் இருந்து விலகி முறைப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஆஷிஸ் தாஸ் இணைவார் என்று கூறப்படுகிறது. ஆஷிஸ் தாஸ், திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தால் அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து திரிபுரா பாஜக எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் கட்சிக்கு தாவக் கூடும். இதனால் திரிபுராவில் ஆளும் பாஜக அரசு கவிழும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

English summary
Tripura MLA Ashish Das will quit BJP and to join TMC today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X