“ஆவேசமாகப் பேசி... நாக்கை துருத்தி.. அடித்து”... இதெல்லாம் செஞ்சது 'கேப்டனில்லை'... ஒரு டிடிஆர்!
டெல்லி: ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ஆவேசமாகப் பேசி, பெண் பயணி ஒருவரை அடிக்க முற்படுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரச்சார மேடைகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான், தொண்டர்களை அடிப்பது, நாக்கைத் துருத்தி கண்டிப்பது என மிரட்டி வருகிறார் என்றால், அவருக்கும் ஒரு படி மேலே போய் பயணிகளைத் தாக்கியுள்ளார் ஒரு டிடிஆர்.
இந்த சம்பவம் நடந்த இடம் தெரியவில்லை. என்ன காரணத்திற்காக பயணிகளை இவர் இப்படி திட்டுகிறார் என்பதும் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக பெண் பயணி ஒருவரிடம் அவர் கோபமாக நடந்து கொள்கிறார். செல்போனில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்க்கும் போது, "உலகத்துல இருக்கற அத்தனை கோபக்காரங்களும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க போல" என்ற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications