For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு.. இன்னும் 24 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சினையும் முடிந்துவிடும்: மத்திய அமைச்சர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இன்று அல்லது நாளைக்குள் ஜல்லிக்கட்டு பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையிலான தமிழக அரசின் அவசர சட்டம், மத்திய உள்துறை அமைச்சகத்தால், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் இன்று அனில் மாதவ் தவே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:

Union Environment minister says clear solution to Jallikattu in 24 hours

தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவு இன்று கிடைத்தது. இதையடுத்து அது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவசரச் சட்டம் அமலுக்குவர வேண்டும் என்பதற்காக, தாமதமின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக பாரம்பரியத்தை காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு. மத்திய அரசு எப்போதும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும். இன்று அல்லது நாளை ஜல்லிக்கட்டு பிரச்னை முடிவுக்கு வரும்.

தமிழகத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும், 24 மணி நேரத்திற்குள் ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து தமிழக மக்களுக்கு நல்ல செய்தி வரும்

English summary
Union Environment minister says clear solution to Jallikattu expected by evening or tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X